Watch Full VIdeo : – நான் ரொம்ப Enjoy பண்ணி நடிச்சேன் – Arvind Swamy Speech

Thalaivi Movie Trailer : தமிழக அரசியலில் மிகப் பெரிய அரசியல் தலைவராக வலம் வந்தவர் செல்வி ஜெயலலிதா. இவரது மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் முயற்சியில் பல இயக்குனர்கள் இறங்கி உள்ளனர்.

குயின் என்ற பெயரில் கௌதம் வாசுதேவ மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப்சீரிஸ் தொடராக இயக்கினார். அவரைத் தொடர்ந்து இயக்குனர் விஜய் கங்கனா ரனாவத் அரவிந்த்சாமி உள்ளிட்டோரை வைத்து தலைவி என்ற பெயரில் படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்கள், டீசர் ஆகியவை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

இந்த டிரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும் ஏப்ரல் 23ஆம் தேதி இந்த படம் தமிழ் தெலுங்கு இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.