Aruvaa Movie Official Update
Aruvaa Movie Official Update

சூர்யாவுக்கு பதிலாக அருவா படத்தில் அருண் விஜய் நடிக்க இருப்பதாக வெளியான தகவலுக்கு படக்குழு விளக்கம் அளித்துள்ளது.

Aruvaa Movie Official Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தின் சூரரைப்போற்று என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா ஹரி இயக்கத்தில் அருவா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு கிராமத்து கதை உள்ளிட்ட படங்களில் நடிக்க உள்ளார்.

இந்தநிலையில் அருவா படத்தை தற்போதைக்கு வேண்டாமென சூர்யா முடிவெடுத்துள்ளதாகவும் இதனால் இப்படத்தில் சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய்யை வைத்து ஹரி இயக்கி இருப்பதாகவும் தகவல்கள் பரவின.

மாஸ்டர் படக்குழு கொடுக்கும் அடுத்த ட்ரீட் – வெளியானது செம அப்டேட்!

இதற்கு தற்போது படக்குழு தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது அருவா படத்தில் சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய் நடிக்க உள்ளதாக வெளியான தகவல் உண்மையல்ல என படக்குழு கூறியுள்ளது.

இந்தக் கொரானா வைரஸ் தாக்கம் முடிவடைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.