கொரோனா வைரஸ் தொற்றால் இயக்குனர் அருண் ராஜா காமராஜ் அவர்களின் மனைவி மரணம் அடைந்தார்.

ArunRaja Kamaraja Wife Passes Away : தமிழ் சினிமாவில் காலா படத்தில் இடம்பெற்ற நெருப்புடா பாடலைப் பாடி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் அருண்ராஜா காமராஜ். நடிகர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான இவர் கனா என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராகவும் அறிமுகமானார்.

கொரானாவால் இயக்குனர் அருண் ராஜா காமராஜ் மனைவி காலமானார்

கனா படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஆர்ட்டிக்கள் 15 என்ற படத்தின் ரீமேக்கை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.