Arunraja Kamaraj Talks About vijay film : Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Kathir, Indhuja, Latest Cinema News

Arunraja Kamaraj Talks About vijay film :

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் பிகில். கால் பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதைதொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

ஆடை படத்துக்காக இத்தனை நாள் ஆடையில்லாமல் நடித்தாரா அமலா பால்? மிரட்டல் தகவல்!

இந்த படத்தை இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இவர் மாநகரம் படத்தை இயக்கிவிட்டு தற்போது கார்த்தி நடிப்பில் கைதி படத்தை இயக்கி வருகிறார்.

முன்னதாக அருண்ராஜா காமராஜ்தான் இப்படத்தை இயக்குவார் என்று சொல்லப்பட்டது. அவர் விஜய்யை சந்தித்து கதை கூறியதாகவும் சொல்லப்பட்டது.

ஆனால் அப்படியொரு விஷயமே நடக்கவில்லையாம். தான் இன்னும் விஜய்யை சந்திக்கவில்லை என்றும் எனினும் விஜய்யை வைத்து படம் எடுப்பதே தனது லட்சியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.