
அருண்மொழிவர்மனின் கதாபாத்திரம் உருவான விதத்தின் வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் கடந்த ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றிருந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகத்தில் அருண்மொழி வருமனாக நடித்து அனைவரையும் அசத்தியிருந்தார்.

இப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து தற்போது பொன்னியன் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. மேலும் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா வரும் 29ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்களின் கதாபாத்திரங்கள் உருவான விதத்தின் வீடியோவை ஒவ்வொன்றாக படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஜெயம் ரவியின் அருள்மொழிவர்மனின் கதாபாத்திரம் உருவான விதத்தின் வீடியோவை வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.