Arun Vijay With Daughter

மகளுடன் அருண் விஜய் வெளியிட்ட அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது

Arun Vijay With Daughter : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகனாக இருந்தாலும் பெரும் போராட்டத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

என்னை அறிந்தால் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அருண் விஜய் அதன் பின்னர் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இவர் சமீபத்தில் தன்னுடைய மகளுடன் எடுத்த த்ரோபேக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்ட இந்த புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அடடடடா அருண் விஜய்க்கு இம்புட்டு அழகான மகளா என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.