Thala Ajith : தன்னுடன் நடித்த நடிகரை பற்றி தல அஜித் தன்னுடைய மேனேஜர் மூலமாக விசாரித்துள்ளார். இதனை அந்த நடிகரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் ரசிகர்கள், தன்னுடன் பணியாற்றும் சக கலைஞர்களென அனைவரிடமும் மரியாதையுடன் நடந்து கொள்பவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

எவ்வித முகமூடியும் இல்லாத மனிதர் அஜித் – மாபெரும் நடிகர் பேச்சு.!

இவர் தன்னுடைய மேனஜர் மூலமாக தன்னுடன் சேர்ந்து நடித்த நடிகர் ஒருவரை பற்றி விசாரித்து வந்துள்ளார். அதனை தற்போது சம்மந்தப்பட்ட நடிகர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

யார் அந்த நடிகர் என்று தானே யோசிக்கிறீர்கள்? அவர் வேறு யாரும் இல்லை என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்திருந்தார் அருண் விஜய் தான்.

இது குறித்து அருண் விஜய் அளித்துள்ள பேட்டி ஒன்றில் என்னை பற்றி தல அஜித் மற்றொருவரின் மூலமாக விசாரிப்பார். எங்களுக்கும் நேரடி தொடர்பு இல்லை என்றாலும் நல்ல உறவு இருந்து வருகிறது.

படப்பிடிப்பில் அவர் எனக்கு நிறைய விசயங்களை கற்று கொடுத்தார். அவை அனைத்தும் இன்று வரை எனக்கும் ஞாபகம் உள்ளது. என்றைக்கும் மறக்க மாட்டேன் என கூறியுள்ளார்.

Arun Vijay

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.