முறுக்கு மீசையுடன் மிரட்டலான லுக்கில் அருண் விஜய் போட்டோ ஷூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Arun Vijay Photoshoot Photos : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகனாக இருந்தாலும் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க போராடி வந்தார்.
தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரை படத்தில் அவருக்கு வில்லனாக நடித்து தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இடம் பிடித்தார். அதன் பின்னர் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளாக தேடிப்பிடித்து நடித்து வருகிறார்.
சமூகவலைத்தள பக்கத்தில் ஆக்டிவ்வாக இருந்து வரும் அருண் விஜய் சமீபத்தில் போட்டோ ஷூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். முறுக்கு மீசையுடன் செம கெத்தான லுக்கில் அருண் விஜய் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மேலும் இந்த போட்டோ ஷூட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.