Arun Vijay Next Movie Getup
Arun Vijay Next Movie Getup

கிடா மீசையுடன் பக்கா கிராமத்து கெட்டப்பில் இருக்கும் அருண்விஜயின் புகைப்படத்தோடு அவரது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Arun Vijay Next Movie Getup : தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான விஜயகுமாரின் மகன் அருண் விஜய். தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்க போராடி வந்த இவர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு வில்லனாக நடித்து இருந்தார்.

இதன் மூலம் அருண்விஜய் தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்தார். அதன் பின்னர் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து வெற்றி நாயகனாக வலம் வரத் தொடங்கியுள்ளார்.

இறுதியாக இவரது நடிப்பில் மாபியா என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. இப்படத்தை அடுத்து இவரது நடிப்பில் சினம் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. படத்திற்காக அருண் விஜய் கிடா மீசையுடன் பக்கா கிராமத்து கெட்டப்பில் உள்ளார்.

மாம்ஸ் விஜயிடம் வீடியோ காலில் பேசிய மாஸ்டர் பட நடிகர், விஜய்யோட லாக் டவுன் லுக் எப்படி இருக்கு பாருங்க – புகைப்படத்துடன் இதோ

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

அஜித் ரசிகர்கள் தூக்கு துரைக்கு தம்பி இருந்தா இப்படித்தான் இருக்கும் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ரசிகர்களின் கமெண்ட்ஸ்

https://twitter.com/Aravind01431/status/1290284176655048705?s=19