Arun Vijay Miss His Workouts
Arun Vijay Miss His Workouts

இப்போது நான் மிஸ் செய்வதெல்லாம் இதுதான் என அறிவிக்கக் கூடிய ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Arun Vijay Miss His Workouts : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அருண் விஜய். தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என போராடிய இவருக்கு அஜித்தின் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் கிடைத்த வாய்ப்பு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

அந்தரங்கத்தில் தொங்கியபடி ஒர்க்கவுட்.. கண்ணிமைக்கும் நேரத்தில் அருண் விஜய்க்கு நடந்த சோகம்.. வெளியான அதிர்ச்சி !

அதன் பின்னர் நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார் அருண் விஜய். மேலும் நடிப்பை தாண்டி தன்னுடைய உடலை எப்போதும் ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என ஆசைப்படுபவர்.

இதனால் தனக்கு கிடைக்கும் நேரங்களை எல்லாம் ஜிம்மிலேயே செலவிட்டு வருகிறார். தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஜிம்முக்கு செல்ல முடியாமல் இருந்து வருகிறார்.

இருப்பினும் வீட்டிலேயே தினமும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வரும் அருண் விஜய் தன்னுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து வருகிறார்.

எம்ஜிஆருக்கு பிறகு மீனவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே தலைவன் விஜய் தான் – புகைப்படத்தை வெளியிட்டு பிரபல நடிகர் புகழாரம்!

அந்த வகையில் தற்போது தான் ஜிம்மில் வொர்க் அவுட் செய்வதை மிஸ் செய்ததாக கூறி கடுமையாகவும் வெறித்தனமாகவும் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதேபோல் அருண் விஜய் சில தினங்களுக்கு முன்பு அந்தரத்தில் தொங்கியபடி உடற்பயிற்சி செய்த போது தவறி கீழே விழுந்து விபத்துக்குள்ளான வீடியோவையும் வெளியிட்டு இருந்தார்.

மேலும் அந்த வீடியோவில் ட்ரைனர் அருகில் இல்லாமல் தயவுசெய்து ஒர்க்கவுட் செய்யாதீர்கள் என அவர் கூறியிருந்தார்.

ஊரடங்கு முடிந்ததும் அருண் விஜய் நடிப்பில் அடுத்தடுத்து பல படங்கள் ரிலீசுக்கு காத்து இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அருண் விஜய் அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை இது உண்மை என்றால் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

மேலும் இவர் சமீபத்தில் தனது மகன் ஆர்வத்துடன் தெரு நாய்களுக்கு உணவு அளித்ததை புகைப்படமாக வெளியிட்டு மகிழ்ச்சி அடைந்து இருந்தார்.