Arun Vijay Daughter Photos
Arun Vijay Daughter Photos

நடிகர் அருண் விஜய்யின் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Arun Vijay Daughter Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். பழம்பெரும் நடிகரான விஜயகுமாரின் மகன் ஆவார்.

வாரிசு நடிகராக இருந்தாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க போராடி வந்தார். அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

விஜய் ரசிகர்களை குஷியாக்கிய ஜீ தமிழ் அர்ச்சனாவின் மகள் – இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

அந்த வாய்ப்புதான் இவரின் திரைப்பயணத்தில் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதன் பின்னர் அருண் விஜய் நல்ல நல்ல திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அருண் விஜய்க்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் தன்னுடைய மகனின் புகைப்படத்தை மட்டும் தான் சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்து வந்துள்ளார்.

தற்போது அருண் விஜயின் மகளுக்கு பிறந்தநாள் என்பதால் அவரின் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.

அருண் விஜய்யின் மகளின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு அழகான மகள் இருக்கிறாரா என ஆச்சர்யத்துடன் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

அதேசமயம் ரசிகர்களும் அருண்விஜய் மகளின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.