Arun Vijay
அருண் விஜய் நேற்று வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் அல்லு தெறித்து ஓடுகின்றனர்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். வெற்றிக்காக ஏங்கி கொண்டிருந்த இவருக்கு தல அஜித் நடிப்பில் வெளியான எனை அறிந்தால் திரைப்படம் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

இதனையடுத்து தொடர்ந்து ஓரளவிற்கு வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார், நடிப்பிலும் தன்னை அடுத்தடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறார்.

இந்நிலையில் இவர் தன்னுடைய வீட்டு செல்ல பிராணி நாய்க்கு பிறந்த நாள் கொண்டாடியுள்ளார், அந்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் நாயின் உருவத்தை பார்த்து அல்லு தெறித்து ஓடுகின்றனர். அருண் விஜய் வீட்டு பக்கம் போறவங்க எல்லாம் பார்த்து போங்க என கமெண்ட் அடிக்கின்றனர்.

அதுமட்டுமில்லாமல் உங்க வீட்டு நாய்க்கு எல்லாம் பிறந்த நாள் வாழ்த்து சொல்றீங்க, உங்க அக்கா வனிதாவுக்கு சொல்ல மாட்டறீங்க எனவும் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.