மீண்டும் மிரட்டும் வில்லனாக உள்ளார் நடிகர் அருண் விஜய். இதுகுறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Arun Vijay As Villian in Telugu Movie : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அருண் விஜய். தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்க போராடி வந்த இவர் என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்து முக்கிய நடிகராக வலம் வரத்தொடங்கினார்.

மீண்டும் முரட்டு வில்லனாகும் அருண் விஜய்.. ஹீரோ யார் தெரியுமா??

அதன் பின்னர் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அருண் விஜய் மீண்டும் வில்லனாக நடிக்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அதாவது தெலுங்கு சினிமாவில் லிங்குசாமி இயக்கும் திரைப்படத்தில் அருண் விஜய் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் இளம் நடிகர் ராம் பொத்தேனி ஹீரோவாக நடித்து வருகிறார்.