Arun Raja Kamaraj
சிவகார்திகேயன் அருண் ராஜா காமராஜ் படத்தை பற்றி சூசகமாக பேசி இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Arun Raja Kamaraj Next Movie : தமிழ் சினிமாவில் பாடகராக வலம் வந்தவர் அருண் ராஜா காமராஜா. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே மிக பெரிய வெற்றியையும் சுவைத்தார்.

மேலும் இவர் தளபதி விஜய்க்கு ஒரு கதையை உருவாக்கி அதை விஜயிடமும் கூறி இருப்பதாக தகவல்கள் கசிந்திருந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் மேடையில் பேசியிருப்பது இன்னும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆம், அருண் ராஜா மிக பெரிய நடிகருடன் கமிட்டாகி இருப்பதாகவும் அது குறித்த அறிவிப்பு முறையாக வரும் எனவும் பேசியுள்ளார். அப்போ அந்த நடிகர் விஜய் தானோ? தளபதி 65 படத்தை தான் இயக்குகிறாரோ? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்புக்காக காத்திருப்போம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.