Arun Pandian Health Status

கொரோனா இருதய கோளாறு என இரண்டையும் தாண்டி உயிர் தப்பியுள்ளார் பிரபல நடிகர் ஒருவர்.

Arun Pandian Health Status : கொரானா, இருதய கோளாறு என இரண்டையும் தாண்டி உயிர் தப்பியுள்ளார் பிரபல நடிகர் அருண் பாண்டியன்.

தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் தயாரிப்பாளராகவும் வலம் வந்தவர் அருண் பாண்டியன். இவர் தற்போது படங்களிலும் குண சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தனது மகளுடன் சேர்ந்து அன்பிற்கினியாள் என்ற படத்தில் நடித்து அசத்தி இருந்தார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் இவருக்கு இருதயத்தில் கோளாறு இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது இரண்டிலிருந்தும் மீண்டு வந்துள்ளார் உயிர் பிழைத்துள்ளார் நடிகர் அருண் பாண்டியன்.

இந்த தகவல் வெளியாகி ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பூரண குணம் பெற்றுள்ள நடிகர் அருண் பாண்டியனுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து அவர் நலமுடன் இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.