இந்த சமுதாயத்தில் ஏதோவொரு வகையில் எல்லோரும் மாற்றுத்திறனாளிகள் தான் என தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் பதிவு செய்துள்ளார்.

Arun Mozhi Manickam About World Disability Day : மனிதராக பிறந்தவர்களில் பிறப்பிலேயே சில குறைகளுடன் பிறப்பவர்கள் உண்டு. அப்படி இல்லை என்றாலும் எதிர்பாராத சூழ்நிலைகளால் சிலருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நீங்க முடியாத குறைகள் உருவாகி விடுகிறது. இப்படியானவர்களை மாற்றுத் திறனாளிகள் என அழைத்து வருகிறோம்.

கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த சதி : செல்லூர் ராஜூ விளக்கம்

இன்று உலகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கான தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த மாற்றுத்திறனாளிகள் தினத்தில் மாயோன் திரைப்படத்தின் தயாரிப்பாளரான அருண்மொழி மாணிக்கம் அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் நம் அனைவரிடமும் ஏதோ ஒரு வகையில் இயலாமை, அச்சம் ஆகியவை உள்ளன. ஆகையால் இந்த சமுதாயத்தில் பிறந்த அனைவருமே ஏதோ ஒரு வகையில் மாற்றுத்திறனாளிகள் தான். சிலரை மட்டும் மாற்றுத்திறனாளிகள் என்ற பெயரில் பிரிக்க வேண்டாம். இந்த சமூகத்தில் அனைவருமே ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம் என பதிவு செய்துள்ளார். மாற்றுத் திறனாளிகளையும் நம்முள் ஒருவராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ‌‌

அஜித்தே சொன்னாலும் நாங்க Thala-ன்னு தான் கூப்பிடுவோம் – Actor Sendrayan Exclusive Speech

மேலும் இவரது தயாரிப்பில் உருவாகியுள்ள மாயோன் திரைப்படத்தின் டீஸர் இதுவரை இல்லாத புது முயற்சியாக பார்வையற்றவர்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டிருந்தது. அதிலும் அந்த பிரத்தியேக டீஸருக்கு குரல் கொடுத்தவரும் ஒரு பார்வையற்ற மாற்றுத் திறனாளி தான். இந்த ட்ரெய்லர் அனைவரது மத்தியிலும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.