நடிகர் அருள்நிதி நடிக்கப் போகும் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருள்நிதி. இவரது நடிப்பில் டிமான்டி காலனி 2 என்ற திரைப்படம் சுதந்திர தினத்தன்று வெளியானது. இந்த படம் வெளியாகி மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அருள்நிதி தொடர்ந்து ஹாரர் படங்களிலேயே கவனம் செலுத்தி வருகிறார்.அந்த வகையில் 2015 ஆம் ஆண்டு வெளியான டிமாண்டி காலனி படத்தின் இரண்டாம் பாகம் தான் இது. இந்தப் படத்தை அஜய் ஆர் ஞானமுத்து இயக்கியுள்ளார்.
மேலும் பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர் மேலும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருந்தார்.
இந்தப் படம் வசூலிலும் தூள் கிளப்பியது என்றே சொல்லலாம். இந்நிலையில் அருள்நிதி அடுத்ததாக எம் செல்வகுமார் என்ற இயக்குனருடன் இணைந்து நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் வித்தியாசமான கதையாக இருக்க போவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.
இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.