திரையரங்கில் வெளியாக இருக்கும் அருள்நிதியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் இணையத்தில் வெளியிட்டதற்கு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் தான் அருள்நிதி. இவர் வம்சம் படம் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து நிறைய படங்கள் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியில் வெளியான படம்தான் ஆறாது சினம் இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அரவிந்த் சீனிவாசன் அவர்கள் இயக்கியுள்ள “தேஜாவும்”என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் அருள்நிதி.

Ft

இப்படத்தில் கதாநாயகியாக ஸ்மிருதி வெங்கட் நடித்துள்ளார். மேலும் இதில் மனோபாலா, காளி வெங்கட் போன்ற பல முன்னணி நடிகர்கள் இணைந்திருக்கும் இப்படத்தை ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் சார்பில் கே. விஜய் பாண்டி அவர்கள் தயாரித்துள்ளார். இதையடுத்து இந்தப்படத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 

சமீபத்தில் வெளியான தேஜாவு படத்தின் டீஸர் ரசிகர்களின் இடையே நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி பற்றி படக்குழு அறிவித்துள்ளது.இந்தப்படம் ஜூலை 21ஆம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த தகவல் ரசிகர்களின் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.