ஆபாசமாக மெசேஜ் செய்த ரசிகரை அதிரடி செயலால் மன்னிப்பு கேட்க வைத்துள்ளார் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் முதல் சீசன் முடிவடைந்து தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

கதையே இல்லாமல் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருவதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் பாரதி கண்ணம்மா சீரியலின் முதல் சீசனில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்த அருள் ஜோதி அயோக்கிய ராஜ் ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய ரசிகரை மன்னிப்பு கேட்க வைத்துள்ளார்.

அவரது இன்ஸ்டாகிராம் பதிவில் ரசிகர் ஒருவர் படு ஆபாசமாக தொடர்ந்து மெசேஜ் செய்ய தனது அதிரடிச் செயலால் அவரை மன்னிப்பு கேட்க வைத்துள்ளார். மேலும் அந்த ரசிகர் இனி எல்லோரையும் மதிப்பேன் என்னை மன்னித்து விடுங்கள் என மெசேஜ் செய்துள்ளார்.

இதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவு செய்துள்ளார் அருள் ஜோதி.