ARMurugadoss wishes Ayogya film | Director AR.Murugadas has recently been together with his family to see Ayogya's film | Vishal | Raashi Khanna

ARMurugadoss wishes Ayogya film :

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அண்மையில் தனது குடும்பத்தாருடன் இணைந்து அயோக்யா படத்தை பார்த்துவிட்டு இப்படத்தை வெகுவாக பாராட்டி தள்ளியுள்ளார்.

வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் ‘அயோக்யா’. இத்திரைப்படத்தில் ராஷி கண்ணா, பார்த்திவன், கே.எஸ்.ரவிக்குமார், சோனியா அகர்வால், ஆர்.ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ளனர்.

பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டிய விஜய்யின் அப்பா – இப்படியொரு சாதனையா?

‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சிஎஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விஷ்ணு ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர். அண்மையில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

எனினும் சரியான புரொமோஷன் இல்லாததால் படம் மக்களை போய் சேரவில்லை. இந்நிலையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அண்மையில் தனது குடும்பத்தாருடன் இணைந்து இப்படத்தை பார்த்துவிட்டு இப்படத்தை வெகுவாக பாராட்டி தள்ளியுள்ளார்.

இப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குநர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.