
A.R.Murugadoss : சர்கார் கதை திருட்டு விவகாரத்தால் சினிமாவை விட்டே வெளியேறி விடலாம் என தோன்றியதாக முருகதாஸ் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் முருகதாஸ். இவர் தற்போது தளபதி விஜயை வைத்து சர்கார் படத்தை இயக்கியுள்ளார்.
தீபாவளி படம் வெளியாக உள்ள நிலையில் சர்க்கார் திருட்டு கதை என வருண் ராஜேந்தர் என்ற உதவி இயக்குனர் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரை விசாரித்த இயக்குனரும் எழுத்தாளர் சங்கத் தலைவருமான பாக்யராஜ் செங்கோல் மற்றும் சர்கார் படத்தின் கதை ஒன்றே என அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
இதனையடுத்து முருகதாஸ் அளித்துள்ள பேட்டி ஒன்றில் எழுத்தாளர் சங்கத்தில் நான் என்னுடைய கதையை கொடுக்கவே இல்லை.
அவர்கள் வருண் கொடுத்த கதையும் மட்டும் படித்து விட்டு இரண்டும் ஒரே கதை என கூறினார் என்ன நியாயம். நான் படத்தை கூட போட்டு காட்டுகிறேன் என கூறினேன். ஆனால் அவர்கள் ஒப்பு கொள்ளவில்லை.
இது போன்ற பிரச்சனைகளால் சினிமாவை விட்டே வெளியேறி விடலாம் என எண்ணுவதாக தன்னுடைய நண்பர்களிடம் கூறி வருத்தப்பட்டதாக கூறியுள்ளார்.