Arjun Reddy to remake in Kannada : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News
இந்தி தமிழைத் தொடர்ந்து கூடிய விரைவில் இப்படம் கன்னடத்திலும் ரீமேக் ஆக உள்ளதாம் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Arjun Reddy to remake in Kannada : 2017-ம் ஆண்டு வெளியாகி தென்னக மொழியையே ஒரு உலுக்கு உலுக்கிய படம் அர்ஜுன் ரெட்டி. இப்படத்தில் நடித்த விஜய் தேவரகொண்டா தற்போது தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளார்.

இந்த படம் வெளியான சமயமே இப்படத்தை ரீமேக் செய்ய பலரும் முயற்சி செய்தனர். அந்த வகையில் இந்தியில் இப்படம் கபர் சிங் எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அண்மையில் திரைக்கு வந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இதுபோக தமிழிலும் பாலா இயக்கத்தில் வர்மா என்ற பெயரில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது ஆனால் இப்படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு தற்போது ஆதித்ய வர்மா என்னும் படத்தை இயக்கிவருகிறார்கள்.

இந்நிலையில் இந்தி தமிழைத் தொடர்ந்து கூடிய விரைவில் இப்படம் கன்னடத்திலும் ரீமேக் ஆக உள்ளதாம் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.