விடாமுயற்சி படத்தில் இருந்து அர்ஜூன் லுக் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் திரிஷா நாயகியாக நடிக்க அர்ஜூன், ஆரவ் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர் வெளியாகி வந்த நிலையில் தற்போது அர்ஜூன் லுக் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
உலகம் முழுவதும் இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.