Arjun Doss About Master Trailer

மாஸ்டர் பட டிரெய்லரை 6 முறை பார்த்ததாகவும் டிரைலர் எப்படி இருக்கு எனவும் பேசியுள்ளார் நடிகர் அர்ஜுன் தாஸ்.

Arjun Doss About Master Trailer : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ் ஆகியோர் வில்லன்களாக நடித்துள்ளனர். சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ் மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் உலகம் முழுவதும் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் கொரோனா வைரஸால் திரையரங்குகள் மூடப்பட்டதன் காரணமாக ரிலீஸ் செய்ய முடியாமல் தள்ளிப் போய் வருகிறது.

Arjun Das Interview Video

தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பி திரையரங்குகள் திறக்கப்பட்டதும் இப்படத்தை பொங்கல் விருந்தாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியான நிலையில் அர்ஜுன் தாஸ் பேட்டி ஒன்றில் மாஸ்டர் ட்ரெய்லரை ஆறுமுறை பார்த்ததாகவும் செம மாஸாக வந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இந்த ட்ரைலரில் விஜய் ஒரு வசனம் பேசியிருப்பார். அது ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இதனால் விஜய் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.