Arjun Dass About Master Trailer
Arjun Dass About Master Trailer

ஒருமுறை இரண்டு முறையல்ல மொத்தம் ஆறு முறை மாஸ்டர் டிரைலரை பார்த்து விட்டதாக நடிகர் அர்ஜுன் தாஸ் கூறியுள்ளார்.

Arjun Dass About Master Trailer : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் உலகம் முழுவதும் வெகு விரைவில் ரிலீசாக உள்ளது.

இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் சாந்தனு, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் அர்ஜுன் தாஸ் லைவ் சாட் வீடியோ ஒன்றில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர்கள் பலரும் மாஸ்டர் ட்ரைலரைப் குறித்து கேட்டுள்ளனர்.

எல்லாம் விதி.. பசு மாட்டோட வாக்குவாதம் செய்யும் மணிமேகலை – இவங்க அலம்பல் தாங்கலப்பா.!

அர்ஜுன் தாஸ் இதுவரை 6 முறை மாஸ்டர் டிரைலரை பார்த்து விட்டேன் மரண மாஸாக வந்துள்ளது. எவ்வளவு நாள் காத்து இருந்தாலும் அது நிச்சயம் வொர்த் தான்.

மாஸ்டர் படம் தியேட்டரில் வெளியாகுமா? OTT-யில் வெளியாகுமா? என கேட்டதற்கு நிச்சயம் தியேட்டரில் தான் ரிலீஸாகும்.நாலு மணி, 5 மணி காட்சிகளை பார்க்க நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் விஜய் சார் ஒரு டயலாக் பேசி இருப்பார் அந்த காட்சி எல்லாம் செம்ம மாஸாக வந்திருக்கிறது என கூறி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக கூட்டியுள்ளார்.