Arjun Das Interview Video
Arjun Das Interview Video

சூர்யா பட டயலாக் அசால்ட்டாக பேசி அசத்தியுள்ளார் அர்ஜுன் தாஸ். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Arjun Das Interview Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வரத் தொடங்கி இருப்பவர் அர்ஜுன் தாஸ். கைதி படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.

பார்ப்பதற்கு ஒல்லியாக இருந்தாலும் அவருடைய உருவத்திற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத குரலால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர்.

செல்ல மகளுடன் கொஞ்சி விளையாடும் ஆலியா, குழந்தை கொடுக்கும் க்யூட் ரியாக்சன் – பார்க்க பார்க்க சலிக்காத வீடியோ!

கைதி படத்தைத் தொடர்ந்து தற்போது தளபதி விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். மேலும் அட்லியின் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் இயக்கத்தில் அந்தகாரம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

தற்போது அர்ஜுன் தாஸ் பேட்டி ஒன்றில் வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யா பேசும் ஹாய் மாலினி இதை சொல்லியே ஆகணும் நீ அவ்வளவு அழகு என்ற டயலாக்கை அசால்டாக அப்படியே பேசி அசத்தியுள்ளார்.

அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அர்ஜுன் தாஸின் குரலில் அந்த வசனம் இன்னும் பவர்ஃபுல் ஆகியுள்ளது.

https://www.instagram.com/p/CBVEr4fAAPy/?igshid=163v50wqng62c