Arjuman Dedication for PubG Movie

பப்ஜி படத்துக்காக நான்கு வருடங்களாக வளர்த்து வந்த முடியை வெட்டி உள்ளார் நடிகர் விக்ரமின் மருமகன் அர்ஜுமனன்.

Arjuman Dedication for PubG Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம் இவருடைய மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அவரைத் தொடர்ந்து விக்ரம் தங்கை மகன் அர்ஜுமன் பொல்லாத உலகின் பயங்கர கேம் பப்ஜி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகிறார்.

சிறந்த கேப்டன் கங்குலியா? டோனியா? : ஷேவாக் பதில்

இந்த படத்தினை தாதா87 படத்தை இயக்கிய விஜய் இயக்குகிறார். படத்தில் பல நடிகைகள் நாயகியாக நடித்து வருகின்றனர். இந்த படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

நாய் சேகர் படத்தின் தலைப்பில் தீடிர் மாற்றம் – படக்குழுவினர் அதிரடி முடிவு! | Vadivelu, Suraj | Lyca

இந்த நிலையில் தற்போது படத்தின் காட்சி ஒன்றிற்காக கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக வளர்த்து வந்த தன்னுடைய முடியை வெட்டியுள்ளார் அர்ஜுமன். மேலும் அவர் வெட்டிய முடியை கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தானமாக கொடுத்துள்ளார்.

இந்த வீடியோவை இயக்குனர் விஜய் வ்ஸ் விஜய் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் டீசர் தீபாவளி தினத்தில் வெளிவருவது மகிழ்ச்சி எனவும் தெரிவித்துள்ளார்.