Arjay in Annathae Movie

அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக முரட்டு வில்லன் நடிகர் ஒருவர் ஒப்பந்தமாகி உள்ளார்.

Arjay in Annathae Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடைபெற்று வருகின்றன. படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க கீர்த்தி சுரேஷ் தங்கையாக நடித்து வருகிறார். மேலும் குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் என பலர் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்த திரைப்படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அண்ணாத்த படத்தில் தெறி, சுல்தான் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்த அர்ஜய் என்பவர் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இவர் அண்ணாத்த திரைப்படத்தில் படையப்பா, அருணாச்சலம் உள்ளிட்ட படங்களில் பார்த்த ரஜினியை மீண்டும் பார்க்கலாம் என அர்ஜய் தெரிவித்துள்ளார்.