Ariyalur Farmers Thanks to CM
Ariyalur Farmers Thanks to CM

பருவமழை காரணமாக வெள்ளாற்றின் நடுவே கட்டப்பட்ட தடுப்பணையால் தற்போது கடல் போல் காட்சியளிக்கிறது.

Ariyalur Farmers Thanks to CM: இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டில் பெய்யும் மழை நீரில் ஒரு சொட்டு நீரை கூட வீணாக்க கூடாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் தெந்தேரி அருகே ஆலயத்ததூர் கிராமத்தை ஒட்டி செல்லும் வெள்ளாற்றின் நடுவே தடுப்பணை கட்ட வேண்டும் என மாவட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெள்ளாற்றின் குறுக்கே உடனே தடுப்பணையை கட்ட உத்தரவிட்டார்.

இதனையடுத்து பொதுப்பணித் துறையின் கண்காணிப்பில் பருவமழை தொடங்குவதற்கு உள்ளாகவே இந்த தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

தற்போது பயன்பாட்டிறகு வந்துள்ளது தடுப்பணையில் பருவமழை காரணமாக மழை நீர் கடல் போல் காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் தங்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி வைத்ததற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி கூறி வருகின்றனர்.