மேஷ ராசி

Aries Benefits 2019 : ராசிச் சக்கரத்தில் முதல் ராசியாக திகழ்வது மேஷ ராசி. அடிப்படையிலேயே வீர உணர்வு கொண்ட மேஷ ராசிக்காரர்களே,

2019 தொடக்கத்தில் பொருளாதார நிலையில் நெருக்கடிகள் வரும். இருந்தாலும் பிற்பகுதியில் வருமானத்துக்கு குறை ஏதும் இல்லாமல் பணவரவு அதிகரிக்கும்.

உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். இந்த வருடம் உங்களது ஆரோக்கியம் பற்றிய கவனம் கொண்டிருப்பதால், வருட ஆரம்பத்தில் உடல்நலனில் சாதகமான பலன்களை பெறலாம்.

இந்த காலகட்டத்தில், சின்னச்சின்ன டென்ஷன்களை கைவிட்டால் உங்களது உடல் ஆரோக்கியமாகவே இருக்கும்.

வேலையில் இருப்பவர்களுக்கு வேலை சுமை அதிகமாக இருக்கும். புதிதாக வேலை தேடும் நபர்களுக்கு சிறுசிறு தடங்கல்களுக்கு பின்னர் நல்ல வேலை அமையும். வெளியூர், வெளிநாடுகளின் வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

அரசியல், பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு மிகவும் தர்மசங்கடமான நிலை ஏற்படும். ஆகவே கவனமாக இருப்பது நல்லது.

விவசாயிகளுக்கு பயிர்க் கடன்கள் சற்று தாமதத்திற்குப் பின்னர் கிடைக்கும். ஆகவே மனம் தளராமல் முயற்சி செய்வது நன்மை பயக்கும். கலைத் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும்.

பெண்கள் உடல் நலத்தில் மிகவும் அக்கறை செலுத்த வேண்டும். வெளி உணவுகளை தவிர்ப்பது நன்மை பயக்கும். பிள்ளைகளினால் ஒரு சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் இறுதியில் நன்மையாகவே முடியும். மாணவ மாணவியர் கல்வியில் மிகுந்த அக்கறை செலுத்தினால் சிறப்பான மதிப்பெண்களைப் பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here