Archanai

🙏 கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்யும் போது நமது பெயருக்கு செய்வது நல்லதா, இறைவன் பெயரில் செய்வது நல்லதா, என்ற குழப்பம் நிறைய பக்தர்களுக்கு உண்டு.

🙏 அர்ச்சனை என்பது நம்மைப் படைத்த இறைவனின் புகழை மனதார, வாயார பாடுவதாகும். அப்படி பாடும் போதே நமது குறைகளையும் அவனிடம் முறையிடுவது தான் அர்ச்சனை செய்வதன் தாத்பரியம்.

🙏 நாம் கடவுளிடம் ஏதாவது கோரிக்கை வைத்து, அது நிறைவேறி விட்டால் கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக கடவுள் பெயரில் அர்ச்சனை செய்வோரும் உண்டு.

🙏 கடவுளிடம் இந்த நபருக்கு இந்த கோரிக்கை நிறைவேற வேண்டுமென்று, அந்த நபரின் பெயரில் அர்ச்சனை செய்வோரும் உண்டு.

🙏 கடவுளுக்கு எதிரே நாம் போய் நின்றாலே, நமக்கு என்ன பிரச்சனை என்று கடவுள் ஸ்கேன் செய்த விடுவார். அப்படி இருக்க நாம் ஏன் நமது பெயரில் அர்ச்சனை செய்யவேண்டும். கடவுள் பெயரில் அர்ச்சனை செய்தால் அவரே நம்மைப் பார்த்துக் கொள்வார்.

🙏 எனவே பொதுவாக அவர் பெயரிலேயே செய்து விடுவது தான் சாலச்சிறந்தது ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here