Archana Sister Blessed With Boy Baby

பிக் பாஸ் அர்ச்சனாவின் தங்கைக்கு சீமந்தம் நடைபெற்றிருந்த நிலையில் தற்போது அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.

Archana Sister Blessed With Boy Baby : தமிழ் சினிமாவில் நடிகையாகவும் சின்னத்திரையில் தொகுப்பாளினியாகவும் வலம் வருபவர் அர்ச்சனா. மேலும் இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்டார்.

பிக் பாஸ் அர்ச்சனாவின் தங்கைக்கு குழந்தை பிறந்தது, என்ன குழந்தை தெரியுமா? - அர்ச்சனா வெளியிட்ட வீடியோ.!!

இவருடைய தங்கைக்கு சமீபத்தில் சீமந்தம் நடைபெற்று இருந்தது. இந்த விழாவில் பிக்பாஸ் பிரபலங்கள் அனைவரும் பங்கேற்று வைத்திருந்தனர். அந்தப் புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் டிரெண்டாக பரவியது. இந்த நிலையில் தற்போது இவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதனை அர்ச்சனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.