bigil-1
தளபதி 64 படத்தின் அப்டேட் கேட்ட அர்ச்சனா கல்பாத்தியிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்னதாக அட்லீ இயக்கிய பிகில் படத்தில் நடித்திருந்தார்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விஜயின் தீவிர ரசிகர் தான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இதனால் இவர் தளபதி 64 படத்தின் அப்டேட் குடுங்க என டீவீட் செய்ய ரசிகர்கள் என்ன பழிக்கு பழியா? இப்போ புரியுதா எங்க கஷ்டம்.. எவ்வளவோ கேட்டு கெஞ்சி இருப்போம் உங்க கிட்ட என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் விஜய் 64 இருக்கட்டும் பிகில் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் கொடுங்க எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.