பிகில் படத்தால் ரூபாய் 20 கோடி நஷ்டம் என பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியதற்கு அர்ச்சனா பதிலடி கொடுத்துள்ளார்.

Archana Kalpathi About Bigil : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகவிருந்த இந்தப் படம் ஊரடங்கு உத்தரவு காரணமாக தள்ளிப் போனது. இதனையடுத்து படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விஜய் இந்த படத்திற்கு முன்னதாக அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகி இருந்த பிகில் படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரூபாய் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து பெரும் சாதனை படைத்தது.

இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அர்ச்சனா கல்பாத்தியே பிகில் படத்தில் தங்களது நிறுவனத்திற்கு ரூபாய் 20 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறினார் எனத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து ரசிகர் ஒருவர் அர்ச்சனா கல்பாத்தி இது போன்று எந்த ஒரு பேட்டியிலும் கூறவில்லை இது தவறான தகவல் என்பதை பதிவிட்டிருந்தார் .

ரசிகரின் இந்தப் பதிவிற்கு அர்ச்சனா கல்பாத்தி ஆமாம் இதுதான் உண்மை நான் எந்த பேட்டியிலும் நஷ்டம் என கூறவில்லை என கூறி அந்த பத்திரிக்கையாளர் கூறிய பொய்யின் முகத்திரையை கிழித்து எடுத்துள்ளார்.

மீண்டும் அந்த நாட்கள் எப்பொழுது வரும் தவியாய் தவிக்கும் அர்ச்சனா – புகைப்படத்தை வெளியிட்டு என்ன சொல்கிறார் பாருங்கள்!

ஏற்கனவே பலமுறை பிகில் நஷ்டம் என தகவல் பரவிய நிலையில் தற்போது மீண்டும் பரவியதும் அர்ச்சனா கல்பாத்தி கொடுத்த பதிலடி விஜய் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

அர்ச்சனா கல்பாத்தி இந்த பதிலுக்கு விஜய் ரசிகர்கள் கொடுத்த ரியாக்சன்

அர்ச்சனா கல்பாத்தி கொடுத்த இந்த பதிலாலும் அஜித்-விஜய் ரசிகர்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.