Archana Kalpathi About Bigil Collection
Archana Kalpathi About Bigil Collection

பிகில் திரைப்படம் 20 கோடி நஷ்டம் என அர்ச்சனா பெயரில் அறிக்கை ஒன்று வெளியானதற்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

Archana Kalpathi About Bigil Collection : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான திரைப்படம் பிகில்.

இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ரூபாய் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

ஆனால் பட்ஜெட் காரணமாக இப்படம் தயாரிப்பாளருக்கு ரூ 20 கோடி வரை நஷ்டத்தை ஏற்படுத்தி இருப்பதாக அர்ச்சனா பெயரில் அறிக்கை ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

விஜய் குறித்து விமர்சனமா? போலி பதிவால் அவஸ்தைப்படும் கருணாகரன்

இதனையடுத்து அர்ச்சனா அளித்துள்ள பேட்டி ஒன்றில் ரூபாய் 20 கோடி நஷ்டம் என்று நான் சொன்னேனா?? என் பெயரில் தவறான அறிக்கை ஒன்றை பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால் உண்மையில் பிகிலால் நல்ல லாபம் பெற்றோம். அதற்காக வரியும் செலுத்தி உள்ளோம் என கூறியுள்ளார்.

மேலும் பிகில் படத்தின் சாதனையை முறியடிக்க இன்னும் நீண்ட காலம் ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.