மூளை அருகே அறுவைச் சிகிச்சை செய்த அர்ச்சனாவை தற்போதைய நிலை என்ன என்பது குறித்து அவருடைய மகள் சாரா தகவல் வெளியிட்டுள்ளார்.

Archana Health Status Update : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் அர்ச்சனா. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து இதே சேனலில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

தமிழகத்தில், பிளஸ்-2 மதிப்பெண் பட்டியல் வெளியீடு : முழு விவரம்

சமீபத்தில் இவருக்கு மூளை அருகே அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அர்ச்சனாவின் உடல்நிலை குறித்து அவருடைய மகள் சாரா பதிவு செய்துள்ளார்.

அர்ச்சனா தற்போது நலமுடன் இருப்பதாகவும் அவர் வீடு திரும்பி விட்டதாகவும் விரைவில் உங்களை சந்திப்பார் எனவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாரா தெரியப்படுத்தியுள்ளார்.

Sivakarthikeyan – Anirudh-க்கு நன்றி சொன்ன கவின்! – விரைவில் ரிலீஸ்தேதி அறிவிப்பு

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.