பிக் பாஸ் வீட்டில் புதிதாக போட்டியாளர் ஒருவர் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
Archana Entry in Bigg Boss 4 : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் 4வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். ஏற்கனவே பதினேழாவது போட்டியாளராக ஜீ தமிழ் அர்ச்சனா பங்கேற்பார் என கூறப்பட்டு வந்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இவர் வீட்டிற்கு செல்ல இருந்த நிலையில் ஜீதமிழ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அப்போது செல்ல முடியாமல் போனது. தற்போது அந்த பிரச்சனையை சுமூகமாக முடித்து வைக்கப்பட்டு அர்ச்சனா பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளார்.
இது குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.