அரவிந்த் சாமி
அரசியல் யாருக்கு சப்போர்ட் என்பது பற்றி அரவிந் சாமி ஓப்பனாக பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அரவிந்த் சாமி. ஹீரோவாக வலம் வந்த இவர் கொஞ்ச காலம் சினிமா பக்கம் வராமல் இருந்தார்.

அதன் பின்னர் வில்லன், ஹீரோ என இரண்டு வேடங்களில் கலக்கி வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கமல் அரசியலில் குதித்து விட்டார். ரஜினி வருவேன் என கூறுகிறேன், விஜயும் அரசியலில் குதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களில் உங்களின் ஆதரவு யாருக்கு என கேட்டுள்ளனர். அதற்கு அரவிந்த் சாமி யாருக்கும் கண்ணை மூடி கொண்டு ஆதரவு தெரிவிக்க முடியாது.

அவர்களின் செயல்களை வைத்து தான் சப்போர்ட் செய்வேன் என கூறியுள்ளார்.