Aravind Samy in MGR Gettup

தலைவி படத்திற்காக அசலாக எம்ஜிஆர் ஆகவே மாறியுள்ளார் அரவிந்த்சாமி. இந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

Aravind Samy in MGR Gettup : தமிழ் சினிமாவில் நடிகையாகவும் தமிழக அரசியலில் முக்கிய தலைவராகவும் வலம் வந்தவர் புரட்சித்தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா.

இவரது மறைவைத் தொடர்ந்து பலர் இவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்க பலர் முயற்சி செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குனர் ஏ எல் விஜய் தலைவி என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கி வருகிறார். இந்தப் படத்தில் கங்கனா ரனாவத் நாயகியாக நடித்து வருகிறார்.

மேலும் இப்படத்தில் அரவிந்த்சாமி எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கனவே இவருடைய எம்ஜிஆர் கெட்டப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வந்தது.

இப்படியான நிலையில் தற்போது அரவிந்த்சாமி எம்ஜிஆர் வேடத்தில் இருக்கும் மேலும் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை இயக்க வைத்து வருகிறது.

அரவிந்த்சாமி அப்படியே எம்ஜிஆராகவே மாறி விட்டார் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.