Aravind Swamy in Valimai
அஜித்துடன் வலிமை படத்தில் அரவிந்த் சாமி நடிக்க மறுத்ததாக பரவிய தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வையை தொடர்ந்து வலிமை என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தையும் எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்க உள்ளார். தல அஜித் இப்படத்தில் போலீசாக நடிக்க இருப்பதால் மிக பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தில் நடிக்க படக்குழு அரவிந்த் சாமியை அணுகியதாகவும் ஆனால் அவர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் தலைவி படத்தில் நடித்து வருவதால் இந்த படத்தை மறுத்து விட்டதாகவும் தகவல் ஒன்று வைரலானது.

தற்போது இது குறித்து அரவிந்த் சாமி பேசியுள்ளார். அதாவது வலிமையில் நடிக்க என்னை யாரும் அணுகவில்லை எனவும் அவர்கள் அழைக்காமல் நான் எப்படி நடிப்பேன் எனவும் கூறி வதந்திக்கு புல்ஸ்டாப் வைத்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.