Maanaadu
மாநாடு படத்தில் சிம்புவுக்கு வில்லனாக சுதீப் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில தமிழ் நடிகரே நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள திரைப்படம் மாநாடு. 2019 ஜனவரியில் தொடங்க இருந்த இந்த கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து பஞ்சாயத்தெல்லாம் நடந்து மீண்டும் 2020 ஜனவரி இறுதியில் தொடங்க உள்ளது. சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க உள்ளார்.

மேலும் சிம்புவுக்கு வில்லனாக கன்னட நடிகர் சுதீப் நடிக்க உள்ளார் என கூறப்பட்டு வந்தது.

சில காரணங்களால் சுதீப் இந்த படத்தை நிரகரித்துள்ளார். இதனால் ஆரம்பத்தில் பேச்சு வார்த்தை நடத்திய அரவிந்த் சாமியையே படக்குழு மீண்டும் அணுக அவர் தற்போது ஓகே சொல்லி விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மாநாடு வில்லன் அரவிந்த் சாமி தான் என்பது ஓரளவிற்கு உறுதியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.