ஆரவ் பற்றி புகழ்ந்து பேசியுள்ளார் மகிழ் திருமேனி.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி வெளியாக உள்ளது.மகிழ் திருமேனி இயக்கத்திலும், லைகா தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
மேலும் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா, ரம்யா, ரவி ராகவேந்திரா, நிகில் போன்ற பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ள ஆரவ் குறித்து இயக்குனர் மகிழ்திருமேனி புகழ்ந்து பேசி உள்ளார். அதில் அவர் வில்லன் மைக்கேல் நிச்சயம் உங்கள் கவனத்தை கவர்வான். மைக்கேல் கதாபாத்திரத்தை நான் உருவாக்கி முடித்ததும் இந்திய துறையில் பல பெரிய நடிகர்களின் பெயர்கள் தோன்றி கொண்டே இருந்தன. ஆனால் ஆரவ்வின் திறமை பக்கம் என் மனம் சாய்ந்தது. கழகத் தலைவன் படத்தின் போது அவரது அர்ப்பணிப்பை நான் பார்த்திருக்கிறேன் அதனால் தான் இந்த கதாபாத்திரத்திற்கு அவரை தேர்வு செய்தேன். பிறகு சில ஷெட்யூல்க்கு பிறகு அஜித் ஆரவ் நடிப்பு மீது திருப்தி தெரிவித்திருந்தார். எனவே என்னுடைய சாய்ஸ் சரி என ஆரவ் நிரூபித்து விட்டார் என்று மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் இறுதி கட்டப்பட பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.
இயக்குனர் மகிழ் திருமேனியின் இந்த பேச்சு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. குறிப்பாக சமீபத்தில் ஆரவ் மிரட்டலாக இருக்கும் போஸ்டர் ஒன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.