Arasa Maram : Spirituality, Aanmeegam news, Spiritual Guidance, spiritual News, ஆன்மிகம், அபூர்வ தகவல்கள், ஆன்மிகம், Vinayagar temple

Arasa Maram :

▪ மரங்களிலே புனிதமானதும் தெய்வீகமானதுமாக கருதப்படுவது அரச மரமாகும். அரசமர வழிபாட்டிற்கு திங்கள், சனிக்கிழமை மிகவும் உகந்தவை.

▪ அரசமரத்தைப் பற்றி பிரம்மா, நாரதருக்கு உபதேசித்த கருத்துக்கள்
பிரம்மாண்ட புராணத்தில் இடம்பெற்றுள்ளன.

அரசமரத்தின்
* தெற்கு பக்க கிளையில் – ருத்ரனும்,
* மேற்கு கிளையில் – விஷ்ணுவும்,
* வடக்கில் – பிரம்மாவும்,
* கிழக்கில் – தேவர்களும்
குடி கொண்டுள்ளனர்.

▪ அதனால், அரசமரத்தை வலம் வந்தால் மும்மூர்த்திகளையும் வழிபட்ட புண்ணியம் உண்டாகும்.

ஒரு மரம் நட்டால் 100 பேருக்கு ஆக்ஸிஜன் கிடைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள்.!!

▪ குழந்தை வரம் வேண்டி பெண்கள் அரசமரத்தை சுற்றுவது வழக்கமான ஒன்றுதான். அதே போன்று ஆண்களும் குழந்தை வரம் வேண்டி, அரசமரத்தை சுற்றலாம் தவறு ஏதும் இல்லை.

▪ அரசமரத்தை காலை வேளையில் மட்டுமே சுற்றுதல் வேண்டும். சூரியன் மறைந்த பின் அரசமரத்தைச் சுற்றக்கூடாது.

▪சனிக்கிழமையன்று அரசமரத்தடியில் அமர்ந்து தசரதர் சனீஸ்வரர் மீது பாடிய சனி ஸ்தோத்திரத்தை படிப்போருக்கு சனிதோஷம் நீங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here