அரண்மனை கிளி சீரியல் ஹீரோவின் வீல் சேரில் அமர ஆசைப்பட்டது மட்டுமில்லாமல் அதில் அமர்ந்து கீழே விழுந்துள்ளார் மிர்ச்சி செந்தில்.
Aranmanai Kili : சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அரண்மனை கிளி. இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வருபவர் சூர்யா தர்ஷன். இவர் இந்த சீரியலில் எப்போதும் வீல் சேரில் தான் இருப்பார்.
இந்த சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றுள்ளார் சரவணன் மீனாட்சி செந்தில். அந்த வீல் சேரில் அமர ஆசைப்பட்டது மட்டுமில்லாமல் அதில் அமர்ந்தும் உள்ளார்.
செந்திலுக்கு, சூர்யா அந்த வீல் சேரில் இருக்கும் வசதிகளை பற்றி சொல்கிறார். அதன் பின்னர் செந்தில் அதில் அமர்ந்து செல்ல கிழே கவிழ்ந்து விடுகிறார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இது உங்களுக்கு தேவை தானா? என விமர்சனம் செய்து வருகின்றனர்.