அரண்மனை 3 படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

Aranmanai 3 Movie Review : தமிழ் சினிமாவின் சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் அரண்மனை மற்றும் அரண்மனை 2 ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது பகுதியாக அரண்மனை 3 இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

மிரள வைக்கிறதா அரண்மனை 3? முழு விமர்சனம்
பாம்பை கடிக்க வைத்து, மனைவி கொலை : குற்றத்திற்கு, இன்று வழங்கப்பட்டது அதிரடி தீர்ப்பு..

இந்த படத்தில் ஆர்யா, ராசி கண்ணா, சுந்தர் சி, விவேக் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்துல இன்னும் காமெடி வச்சு இருக்கலாம் – Aranmanai 3 Public Review | Arya | Sundar c, Raashi Khanna

படத்தில் கதை களம் :

நடிகை ராசி கண்ணா தன்னுடைய குடும்பத்துடன் அரண்மனையில் தங்கி இருக்கிறார். அந்த அரண்மனையில் பேய் இருப்பதாக இவர் கூறியதை அடுத்து இவரை ஹாஸ்டலுக்கு அனுப்பி படிக்க வைக்கிறார் அப்பா சம்பத். இதனையடுத்து தங்களுடைய டிரைவர் இறந்துவிட்டதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து ராசிகன்னா அவருடைய இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக மீண்டும் ஊருக்கு வருகிறார்.

அப்போதும் அந்த அரண்மனையில் பேய் இருப்பதை ராசிகன்னா கண்டுபிடிக்கிறார். மேலும் அவருடைய அத்தை பேத்தியான சிறுமியும் பேய் நடமாட்டம் இருப்பதை உணர்ந்துள்ளார். பேயுடன் சேர்ந்து விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார். அந்த குழந்தையின் அப்பா சுந்தர் சி இந்த அரண்மனைக்கு வந்த பிறகு அங்குள்ள பேயை எப்படி விரட்டி அடிக்க முயற்சி செய்கிறார்? அதன் பின்னர் என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.

படத்தை பற்றிய அலசல் :

படத்தில் ஹீரோவாக நடித்துள்ள ஆர்யாவை ஒரு சில காட்சிகளில்தான் வந்து விட்டுச் செல்கிறார். இருப்பினும் அவரவருக்கான வேலையை கச்சிதமாக செய்து முடித்துள்ளார்.

இயக்குனர் சுந்தர் சி வழக்கம் போல் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். ராசி கண்ணா கவர்ச்சி டாலாக கலக்கி உள்ளார்.

படத்தில் விவேக், மனோபாலா என பலர் காமெடி நடிகர்கள் பட்டாளம் இணைந்து நடித்து இருந்தாலும் பெரிய அளவில் காமெடி கைகொடுக்கவில்லை. விவேக் அவர்கள் கடைசி படமாக இந்தப் படம் வெளியாகி உள்ளது.

படத்தில் ஆண்ட்ரியா பெரிய அளவில் ஸ்கோர் செய்து நல்ல பாராட்டுக்களை பெறுகிறார்.

இசை :

சத்யாவின் இசை படத்திற்கு பலமாக அமைந்தாலும் பாடல்கள் சுமார் ரகம் தான்.

ஒளிப்பதிவு :

செந்தில்குமாரின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாக படமாக்கி உள்ளது.