AR.Rahman
AR.Rahman

AR.Rahman : தமிழகத்தில் பிறந்து இன்று உலகமே போற்றும் ஒரு இசையமைப்பாளராக வளர்ந்திருப்பவர் ஏ.ஆர்.ரகுமான்.

ரோஜாவில் ஆரம்பித்த இவரது திரை பயணம் காலங்கள் கடந்து இன்றும் உச்சத்திலேயே மிளிர்கிறது.

அட்லி – ஷாருக்கான் சந்திப்பு நடந்தது இதனால்தான்; வெளிவந்த உண்மைத் தகவல்!

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என எங்கு சென்றாலும் வெற்றிக்கொடி நாட்டிவரும் ரகுமான் அடுத்ததாக கதையாசிரியராகவும் ஒரு படத்தில் பணியாற்றியுள்ளார்.

99 சாங்க்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இப்படம் முழுக்க முழுக்க இசையமை மையப்படுத்திய ஒரு காதல் படமாக உருவாகிவருகிறது.

99-songs
99-songs

பல வருடங்களாக தயாரிப்பில் இருக்கும் இப்படம் வரும் ஜூன் 29-ம் தேதி திரைக்கு வரும் என ஏ.ஆர்.ரகுமான் தற்போது அறிவித்துள்ளார்.

இந்த தகவலை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ரகுமான் வெளியிட்டுள்ளார். இதைதொடர்ந்து வட இந்திய ஊடகங்களிலும் இதுவே தற்போது தலைப்புச் செய்தியாகி உள்ளது.

இசையமைப்பாளராக தமிழர்களுக்கு பெருமை சேர்த்த ரகுமான், தயாரிப்பாளராகும் கதையாசிரியராகவும் வெற்றிபெற வேண்டும் என ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.