மகனுடன் சேர்ந்து தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான்.

AR Rahman Vaccinated Photo : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவிலும் இதன் இரண்டாவது அலை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.

மகனுடன் சேர்ந்து தடுப்பூசி போட்டுக்கொண்ட இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் - வைரலாகும் புகைப்படம்

இந்த கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இதனால் திரையுலக பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தன்னுடைய மகன் அமீனுடன் சேர்ந்து கொரானா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.