AR Rahman Live Program on Agust 10 at YMCA - Official Update.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cnema News
ஏ.ஆர் ரஹ்மான் நடத்த உள்ள இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய ஒரே நாளில் 5000 டிக்கெட்கள் விற்று தீர்ந்துள்ளன.

AR Rahman Live Program : தமிழ் சினிமாவில் 1992-ம் ஆண்டு ரோஜா படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான்.

இந்திய இசை துறையில் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்ற ஒரே இசையமைப்பாளர் என்ற பெருமையை பெற்றவர் ஆவார். தற்போது இவருடைய இசைக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

சினிமா மட்டுமில்லாமல் வெவ்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக இதுவரை இல்லாத அளவிற்கு மிக பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியை YMCA-யில் ஆகஸ்ட் 10-ம் தேதி நடத்த உள்ளார்.

முன்னணி பாடகர், பாடகிகள் பங்கேற்க உள்ள இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை JSB சதிஷ் தயாரிக்கிறார். இவர் மிக விரைவில் திரைக்கு வர உள்ள விக்ரம் பிரபுவின் அசுரகுரு படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Book Your Tickets Now : http://bit.ly/2Jx1rnN

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.