AR.Rahman is front Runner for Thala 60 | The film's composer Ghibran has been dying since Yesterday | Thala Ajith | Kollywood | TamilCinema

AR.Rahman is front Runner for Thala 60 :

தல 60 படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் என்றொரு தகவல் நேற்றிலிருந்து வைரலாகி வருகிறது.

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

மகனுடன் சென்ராயன் – முதல் முறையாக வெளியான கியூட் புகைப்படம்.!

முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில் பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் அண்மையில் நிறைவுக்கு வந்தது.

இதைதொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அஜித்தின் அடுத்த படத்தை வினோத்தான் இயக்குவர் என்றும் இது ஃபிரெஷ்ஷான ஒரு கதை என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் என்றொரு தகவல் நேற்றிலிருந்து வைரலாகி வருகிறது. ஆனால் இதன் இசையமைப்பாளர் இன்னும் முடிவாகவில்லையாம்.

இந்த படத்துக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிக வாய்ப்பிருப்பதாகவும் அவர் நோ சொல்லிவிட்டால் ஜிப்ரான் இசையமைப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.