
AR Rahman in Hockey World Cup – இந்த மாதம் தொடங்க இருக்கும் ஹாக்கி ஆடவர் உலக கோப்பை போட்டி ஓடிசாவில் நடக்க இருக்கின்றது.
இந்த போட்டிக்கான பாடலுக்கு இந்திய இசையமைப்பாளர் ரஹ்மான் இசை அமைத்து இருந்தார்.
அந்த பாடலை ஓடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று வெளியிட்டார்.
ஓடிசாவில் வரும் செவ்வாய்க்கிழமை (27-ஆம் தேதி) முதல் ஆடவர் ஹாக்கி உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கின்றது.
இந்த தொடரை பிரபலப்படுத்தும் வகையில் ஒரு பாடல் உருவாக்கப்பட்டது.
அந்த பாடல் பிரபல பாடலாசியர் குல்சார் எழுதியுள்ளார். அந்த பாடளின் தொடக்கம் “ஜெஹிந்த், ஜெய் இந்தியா” என்று தொடங்கும்.
பாடலுக்கு இந்தியாவின் மிகவும் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர் மற்றும் உலகளவில் இந்தியாவை இசையின் மூலம் திருப்பி பார்க்க வைத்த ரஹ்மான் அவர்கள் இசையமைத்து இருக்கிறார் என்பது மேலும் கூடுதல் சிறப்பு.
பாடலை வெளியிட புவனேஷ்வர் சென்ற ஏ.ஆர்.ரஹ்மான் அவருக்கு நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டு பின் ஓடிசா மாநிலதின் முதல்வர் நவீன் பட்நாயக் இல்லத்தில் மதிய உணவு அருந்தினார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஹ்மான் “ஒரு நல்ல நண்பனை போல என்னை முதல்வர் நடத்தினார்” என்று கூறினார்.
மேலும் ஓடிசா மாநில முதல்வர் “ரஹ்மானை சந்தித்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது“ என்று கூறினார்.
இந்த சந்திப்பிருக்கு, உரையாடலுக்கும் பிறகு ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் “நவீன் பட்நாயக் 2018 உலக கோப்பை ஹாக்கி பாடலை வெளியிட்டார்” என்று பதிவிட்டு இருந்தார்.